Thursday, September 9, 2010

நம்ம ஊரு அரசியல்

 
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் விஷயத்தில் கழக அரசியல் புகுந்து விளையாடிய கதை இது.
சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம்
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது ஆந்திர கடல் எல்லை ஓரமாக சேதம் அடைந்த நிலையில் படகு ஒன்று தண்ணீரில் அலைபாய்ந்தபடி இருந்தது. நெருங்கிச் சென்று பார்க்க, இரண்டு பேர் அதில் மயங்கிக்கிடந்தார்கள். இருவரையும் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டவர்கள், 'அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். ஒரு நாளில் கரை திரும்பிவிடுவோம்' என்ற தகவலை காசிமேடு மீனவர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார்கள். மயங்கி இருந்த இருவரும் வேதாரண்யத்தை சேர்ந்தவர்கள்.
இந்தத் தகவல், ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான ஜெயக் குமாருக்கு தெரிந்தது. அவர், இது குறித்து வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுத்து காணாமல்போன மீனவர்களின் உறவினர்களை சென்னை வரவழைத்தார். கடந்த 3-ம் தேதி தனது கட்சியின் மீனவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ மீட்கப்பட்ட மீனவர்களை வரவேற்க காசிமேடு துறைமுகத்துக்கு சென்ற ஜெயக் குமாருக்கு அதிர்ச்சி!
அவருக்கு முன்னதாக அதிகாரிகள், பத்திரிகை போட்டோகிராபர்கள், ரோஜா மாலை, தாரை தப்பட்டை... எனப் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருந்தார் மீன் வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி. அதிர்ச்சியை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்ட ஜெயக்குமார், அங்கிருந்து நைஸாக நழுவினார். தொடர்ந்து, படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு உள்ளேயே சென்றவர், அந்த மீனவர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்று, அவர்களுடன் சேர்ந்தே கரை திரும்பினார். இதைப் பார்த்த அமைச்சர் சாமிக்கு, ஆயிரம் வோல்டேஜ் அதிர்ச்சி. வேறு வழி இல்லாமல் ஜெயக்குமாரையும் சேர்த்து வரவேற்க நேர்ந்தது.
இது குறித்து ஜெயக்குமாரிடம் பேசினோம், ''மீனவர்களை காணவில்லை என்று பல நாட்கள் போராட்டம் நடந்தது. இந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. 'நாங்களே தேடிக் கொள்கிறோம். டீசல் மட்டும் கொடுங்கள்...' என்று மீனவர்கள் கேட்டதற்கும் மறுத்துவிட்டார்கள். ஆனால், மீனவர்களே கண்டுபிடித்துக் கொண்டுவந்தபோது, பெயர் வாங்கிக்கொள்ள மட்டும் வருகிறார்கள். விடுவேனா..? நானே நடுக்கடலுக்கு சென்று மீனவர்களை வரவேற்று அவர்களுக்கு கைச்செலவுக்கு 5,000 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினேன்!'' என்றார்.
அமைச்சர் சாமியோ, ''அரசுத் தரப்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தற்செயலாக சென்னை மீனவர்கள் கண்களில் அவர்கள் பட்டவுடன், எனக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அரசு முறைப்படி மீட்கப் பட்ட மீனவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ... அதை நான் செய்தேன்...'' என்றார்.
ம்... அலை கடலுக்குள்ளும் நடக்குது அரசியல்!

Tuesday, September 7, 2010

நக்சலைட்டுகளை மக்கள் ஆதரிப்பது ஏன்?

Source : JV.  நல்லமலை... இந்தியாவின் ஆறு மாநிலங்களில், 160 மாவட்டங்களில் பரந்து
விரிந்திருக்கும் நக்சல் நெட் வொர்க்கின் மையப் புள்ளி!
ஆந்திராவில் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவும், மத்திய இந்தியாவில் செயல்பட்ட எம்.சி.சி. எனப்படும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் 2004-ம் வருடத்தில் 'மாவோயிஸ்ட்டுகள்' என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்தார்கள். அப்போது தங்களின் அரசியல் அஜெண்டாவாக 'ரெட் காரிடர்' என்ற திட்டத்தை அறிவித்தனர். அந்தச் சிவப்புப் பாதையின் ரூட் நல்லமலை டு நேபாள்!
ஆந்திராவின் ராயலசீமாவில் இருக்கிறது நல்லமலை. இதைச் சுற்றிய 40 கிராமங்கள்தான் நக்சல்களின் பலம். எத்தனை இடர்கள் வந்தபோதும், இந்த மக்கள், அரசாங்கத்தைவிட மாவோயிஸ்ட்டுகளையே அதிகம் நம்புகின்றனர். 'அவர்களுக்கு மாவோயிட்ஸ்டுகள் மிகவும் பிடித்தவர்களாக இருப்பது ஏன்?' என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு பயணம் மேற்கொண்டோம்.
நந்திகொட்டூர் கிராமத்தின் ஆலமர மேடையில் அமர்ந்து இருந்த வயதானவர்கள் பேசத் தொடங்கினார்கள். "89-வது வருஷம் நல்லமலையில சில இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து 'ரேடிகல் ஸ்டூடன்ட் யூனியன்', 'ரேடிகல் யூத் லீக்'னு ரெண்டு குழுக்களை ஆரம்பிச்சாங்க. ரெண்டுக்கும் ரெண்டு தலைவருங்க இருந்தாங்க. ஒருத்தர்... ஆஞ்சநேய பாபு. இன்னொருத்தர்... தொம்மல சின்ன நரசிம்மலு. இந்த ரெண்டு பேரும்தான், முதல்ல எங்க கிராமங்களுக்குள் வந்தவங்க. கிராம மக்களை ஒன்று திரட்டி, கிராம முன்னேற்றத்துக்காக சங்கம் அமைச்சாங்க. 'உழுபவனுக்கு நிலம், வேலைக்கு ஏத்த கூலி, சரிசம வாழ்க்கை' இதுதான் கொள்கை. எங்களுக்கு விவசாயம்தான் தொழில். நாங்க காட்டுக்குப் போய் பீடி சுத்த இலைகளைக் கொண்டுவருவோம். மூங்கில் கட்டைகளையும் கொண்டுவருவோம். எங்களை ஃபாரஸ்ட்காரங்க ரொம்பத் துன்பப்படுத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து எங்களைக் காப்பாத்துனது இந்த இயக்கத்துக்காரங்கதான். அதே சமயம், எங்களுக்கு 'காடுகளை அழிக்கக் கூடாது'ன்னு தனியா வகுப்பும் எடுப்பாங்க. இப்படித்தான் எங்களுக்கும் அவங்களுக்கும் நெருக்கம் உருவாச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, அவங்க கையில் துப்பாக்கி வந்துச்சு. எங்களுக்குப் பிரச்னைன்னா, எந்த நேரமும் அவங்கதான் வந்து நிப்பாங்க. நாங்க செய்யற சமையலைச் சாப்பிடுவாங்க. எங்களுக்குப் புரியாத அரசியல் எல்லாம் பேசுவாங்க!"
இன்னோர் இளைஞர் பேசத் தொடங்கினார்... "94-ம் வருஷம் நக்சல்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாங்க. நல்லமலையைச் சுத்தி உள்ள எல்லாக் கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம். உடனே, போலீஸ் படை ஊருக்குள் வந்து, எங்களைச் சித்ரவதை பண்ண ஆரம்பிச்சது. சிலரை ஜெயிலுக்குள்ள பிடிச்சுப் போட்டாங்க. இது இயக்கத்துக்காரங்களுக்குக் கோபத்தை உண்டுபண்ணுச்சு.
நல்லமலை அடிவாரத்தில் பைருலூட்டி பங்களான்னு ஒண்ணு இருந்தது. ஆந்திராவில் எந்த ஆட்சி வந்தாலும் அந்தப் பங்களாவுக்குப் புதுப் பொலிவு கொடுப்பாங்க. அதை இயக்கத்துக்காரங்க குண்டு வெச்சுத் தரை மட்டமாக்கினாங்க. அடுத்த ரெண்டே நாள்ல, இயக்கத் தலைவர் ஆஞ்சநேய பாபுவை போலீஸ் சுட்டுக் கொன்றது. அப்ப இருந்துதான் இந்தப் பகுதிக்கும் நக்சல்களுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாச்சு" என்றார் அந்த இளைஞர்.
ஆந்திராவின் சூப்பர் ஹிட் திட்டமான இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தை வெலுக்கோடு கிராமத்தினர் மட்டும் சபித்துக்கொண்டு இருந் தார்கள். ஊர்க்காரர் ரங்கையாவிடம் காரணம் கேட்டேன்.
"இந்தப் பக்கத்தில் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டங்களில் ஊழலே இருக்காது. காரணம், இயக்கத்துக்காரங்க மேல் உள்ள பயம். இப்போ ஒரு வருஷமா அவங்க யாரும் வர்றது இல்லை. உடனே, இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தில் 400 வீடுகள் கட்டினதாக் கணக்குக் காட்டி இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடிச்சுட்டாங்க. பேப்பர்காரங்க இதைப்பத்தி எவ்வளவோ எழுதிட்டாங்க. ஒண்ணும் நடக்கலை. இயக்கம் வந்தாத்தான் சரியா வரும். வருவாங்கன் னுதான் நாங்களும் காத்துக்கிடக்கோம்" என்கிறார்.
நல்லமலை கிராம மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமான இணைப்பைத் துண்டிக்க ஆந்திர அரசு ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் கொடூரக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, நல்லமலையின் அடிவாரத்தில் சித்தாபுரத்தில் குடிவைத்தது. இலவச நிலம், பாசன வசதி எல்லாம் வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கம் நினைத்தது நடக்கவில்லை. அந்தப் பகுதியில் சாராய ஆறு பெருக்கெடுத்ததுதான் மிச்சம்.
மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் 40 கிராமங்களில் வேம்பட்டாவின் நிலை வேறு. அந்தக் கிராமத்தின் இளைஞர்களிடம் பேசினால், 100 கேள்விகள் கேட்டு பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்தவுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள். "99-வது வருஷம் எங்க ஊருக்கு வந்த அமைச்சர் பிடா வெங்கல்ரெட்டியை இயக்கத்துக்காரங்க சுட்டுக் கொன்னாங்க. ஊழல் செஞ்சதால், அவருக்குத் தண்டனைன்னு காரணம் சொன்னாங்க. அப்பவே எல்லா கட்சிகளுக்கும் எங்க ஊர் மேல் வெறுப்புதான். செத்துப்போன அமைச்சரோட பி.ஏ-வும் எங்க ஊர்தான். அவர் ரொம்ப நல்லவர். அவரையும் இயக்கத்துக்காரங்க கொன்னுட்டாங்க. இது எங்களுக்குப் பிடிக்கலை. 2005-ம் வருஷம் எங்க ஊர்ல ஒரு பஞ்சாயத்துப் பேச இயக்கத்துக்காரங்க எட்டு பேர் வந்தாங்க. நாங்க எல்லோரும் அவங்களைக் கட்டி வெச்சுட்டோம். பிறகு, ஊருக்கு நடுவில் நெருப்பு மூட்டி எட்டு பேரையும் அதுல போட்டு உயிரோடு எரிச்சுட்டோம். உடனே, எங்க கிராமத்தை ஒரு சாக்காவெச்சு மத்த கிராமங்களையும் தனக்குச் சாதகமா மாத்த அரசாங்கம் பல திட்டங்களைப் போட்டது. பஸ் வராத எங்க ஊர்களுக்கு புதுசு புதுசா பஸ் வந்துச்சு. வானம் பார்த்த எங்க பூமிக்கு தண்ணீர் கொண்டுவர ராஜசேகர ரெட்டி 1,000 கோடியில் திட்டம் போட்டார். இப்படி அரசாங்கத்தோட கையாளா நாங்க மாறுவது இயக்கத்துக்காரங்களுக்குப் பிடிக்கலை.
எங்களைப் பேச்சுவார்த்தைக்கு காட்டுக்குக் கூப்பிட்டாங்க. 100 பேர் போனோம். அமைச்சரோட பி.ஏ-வை ஏன் கொன்னோம்னு சொன்னாங்க. அவர் செஞ்ச ஊழல்களை ஆதாரத்தோடு எடுத்துவெச்சாங்க. எல்லாம் முடிஞ்சு நாங்க கிளம்பற நேரம் 'எங்க ஆளுங்களை நெருப்புவெச்சுக் கொளுத்தினவங்களை மட்டும் இங்கேயே எங்ககிட்ட விட்டுட்டு மத்தவங்க போகலாம்'னாங்க. நாங்க அதை எதிர்பார்க்கலை. எட்டுப் பேரை மட்டும் பிடிச்சு வெச்சுக்கிட்டாங்க. எதுவும் செய்ய முடியாம ஊருக்கு வந்துட்டோம். அந்த எட்டுப் பேரையும் அன்னிக்கு ராத்திரியே கொன்னுட்டாங்க. உடனே, போலீஸ் காட்டுக்குள் போச்சு. ஆனா, எதுவும் பண்ண முடியலை. அதுக்குப் பிறகு, இயக்கத்துக்காரங்களோட நடமாட்டமும் குறைஞ்சுபோச்சு. ஏதோ ஒரிஸ்ஸா பார்டர்ல பிஸியா இருக்கிறதா சொல்றாங்க" என்றார்கள் அந்த இளைஞர்கள். அவர்களின் பேச்சில் இயக்கத்துக்காரர்கள் மீது கோபம் இருக்கிறதே தவிர, வெறுப்பு இல்லை!
இப்போது ஏன் இயக்கத்துக்காரர்களின் நடமாட்டம் இல்லை? ஆத்மகூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அதற்கு விடை சொன்னார். "வேம்பட்டா சம்பவத்துக்குப் பிறகு, இயக்கத்தினர் வெளிப்படையாக ஊருக்குள் வருவது இல்லை. அவர்களுக்குத் தேவையான தகவல்கள், உணவு, இதர பொருட்களை 40 கிராமங்களில் இருக்கும் 10 பேர் கொண்ட குழு கவனித்துக்கொண்டது. இந்த 10 பேர் இயக்கத்தில் இருப்பது அவர்களின் குடும்பங்களுக்கே தெரியாது. இந்த 10 பேரையும் போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டது. உடனே, இதை இயக்கமும் மோப்பம் பிடித்துவிட்டது. விளைவு, இப்போது இயக்கத்துக்காரர்கள் யாரையும் நம்புவது இல்லை. யாரையும் சந்திப்பது இல்லை. தற்காலிகமாக நல்லமலையில் இருந்து ஒரிஸ்ஸா பக்கம் முகாமிட்டு இருப்பதாகத் தகவல்" என்றார்.
இவ்வளவு விஷயங்களும் வெளிப்படையாக நடந்தபோதிலும், இந்தப் பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்கூட இல்லை. ஆத்மகூரில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது என்றாலும், அந்த காவல் நிலையமே எக்கச்சக்க காவல் போட்டுதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நல்லமலை மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தைக் கையாள்வது 100 கி.மீ. தொலைவில் இருக்கும் நந்தியால் நகர ஓ.எஸ்.டி. (ஆபரேஷன் ஸ்பெஷல் டியூட்டி) போலீஸ்தான். ஆனால், அவர்கள் தகவல் கிடைத்து நல்லமலை வந்து சேரவே குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்.
நல்லமலை வனச்சரகர் வெங்கடசுப்பையாவைச் சந்தித்தேன். "20 வருடங்களுக்குப் பிறகு, இந்த மலை அடிவாரத்தில் இப்போதுதான் வனச்சரகர் அலுவலகம் தைரியமாகத் திறக்கப்பட்டு இருக்கிறது. நான் தினமும் காடுகளுக்குள் நடந்தேதான் போய் வருகிறேன். இயக்கத்தினர் என் கண்களுக்கு அகப்படவில்லை. உள்ளே இருக்கும் பழங் குடியினரைக் கேட்டாலும் அவர் களும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் காட்டுக்குள் போனபோது ஒரு சில இயக்கத்தினரைப் பார்த்தோம். 'அடுப்புக்காக மரம் கொண்டுபோகும் ஏழைகளை எதுவும் செய்யாதீர்கள். ஆனால், காடுகளை அழித்துக் காசு பார்க்கும் களவாணிகளை விடாதீர்கள். அவர்களைப் பிடிக்க நாங்களே உங்களோடு வருவோம். ஏழைகளை நீங்கள் துன்புறுத்தினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்' என்றார்கள். அவர்களை நல்லவர்கள் என்பதா, கெட்டவர்கள் என்பதா?" என்று கேட்டார்.
மக்களுக்கு அரசைவிட, மாவோயிஸ்ட்டுகளை அதிகம் பிடித்துப்போனதற்கான காரணம் என்ன? முழுமையான பதில் கண்டறிய முடியவில்லை. அந்தப் பதிலில்தான் இருக்கிறது இந்தப் பிரச்னைக்கான தீர்வு!

Friday, May 28, 2010

முடிவு எப்போது ? தீர்வு ? ? ......???

                        
 முடிவு எப்போது ?
                    பாக் தீவிரவாதிக்கும்  மாவோயிஸ்ட்க்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையென சமிப கால சம்பவங்கள் உள்ளன. தொழிலதிபர்கள் கையில் சிக்கி இந்திய சீர்கொளைந்து போய்கிட்டு இருக்கு. அதன் பாதிப்பே மாவோயிஸ்ட் தொடக்கம். அதன் வளர்ச்சி வகிதம் மலைப்பை உண்டக்கிறது. இதுவரை ராணுவத்தை தாக்கிகிட்டு இருந்த மாவோயிஸ்ட் இப்போ மக்களை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா.. பாகிஸ்தானை போல் மாறி வருகிறது. மக்களை குறி வைத்து  ரயில்  கவிழ்ப்பு முடிவு இல்ல தொடக்கம் .... விழிக்குமா இந்திய உள்துறை ?

விழிக்குமா இந்திய உள்துறை?...என்றால்..மாவோயிஸ்ட்டை கொல்ல துணை ராணுவத்தை அனுப்ப தேவையில்லை.  அங்கே உள்ள மலை மக்களுக்கு, இந்திய அரசின் அணைத்து உதவிகை தடுக்கும் சக்தியை களையெடுக்க வேண்டும்.

மாவோயிஸ்ட்  பல குழுகளாக செயல்படுகிறார்கள். உண்மைலே அவர்கள் ஒரு குடையீன் கீழ் செயல்படுகிரர்களா என்பது சந்தேகமே ? சில குழு மக்களை தாக்கும் அளவுக்கு மரத்து போய் மிருகமாய் மாறி வருகிறார்கள். அவர்களுக்கு, அரசாங்கம்  தக்க சிகிச்சை (?) அளிக்கவேண்டும்.

தீர்வு... என்ன  ?
                                விஞ்ஞான உத்திகளை பயன்படுத்தி ரயீல்லில் இருந்து  தண்டவாளத்தை 1 KM தூரத்துக்கு கண்காணிக்க வேண்டும்.

Thursday, May 27, 2010

குழந்தை

{ இது என் முதல் குட்டி கதை -- வேதை ஜீவகன் }

"அருண்..ண்  இங்கே பாருங்க உங்க குழந்தையை  " ....அருந்தா கத்தினால். அருணுக்கு புரிந்துவிட்டது ..குழந்தை தப்பு செய்துவிட்டது என்று. ( தப்பு செய்தால் அது  அருண் குழந்தை. சரியாக  செய்தால் அது   அருந்தா குழந்தை ).

அருந்தா தொடர்ந்தாள்.."இங்க வந்து  பாருங்கோ. சுவரு முழுக்க கலர் பென்சில்ல கிறுக்கி இருக்க ". சரி விடு குழந்தைன அப்படி இப்படி தான் இருக்கும் ..இது அருண். சரி சரி ஓனரிடம் நான் சொல்லிகிறேன் ..என்றான்.  "அந்த  சேட்டு (ஓனர்) இது ஒரு காரணமா வச்சி  அட்வான்ஸ் பணத்தில் பத்தாயீரம்  கழிச்சிடுவார்".. என்றாள். இந்த கலவரத்துக்கு இடையில் வீட்டுக்கு வெளியே மேளம் , தாளம்  , தப்பாட்டம் விண்ணை கிழித்துகிட்டு  இருந்தது .

உடனே அருண் வீட்டின் வாசல் கதவை திறந்தான். மேள தாள கும்பல் நின்றார்கள்.  குழந்தையை கூப்பிடுங்கோ சார்..என்றான் ஒருவன். அருணுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அருந்தாவும்,  குழந்தை ஹர்சு வாசலுக்கு வந்தார்கள். இந்தமா மாலைய  போட்டுக்கோன்னு குழந்தைக்கு  மாலைய போட்டுவிட்டான்... ஒருவன். மூவருக்கும் ஒன்றும் புரியலில்லை. சுவத்தில கலர் பென்சில கிறுக்கினதுக்கு மாலையா ? என்றாள் அருந்தா.

"யோவ் " ...பக்கத்துவிட்டு மாடியில் இருந்து ஒரு பெரியவர். " என் பேத்திக்கு தான் முனிஸ்வரன் கோவில முதல் மொட்டை.. இங்கே வாங்கையா ..வேன் பத்து  நிமிஷத்துல வந்துடும் ..போய் ஏரிகிங்கோ".

அட்வான்ஸ் வாங்கும்போது பணம் எவ்வளவுன்னு எண்ணி பார்கிறாங்க  ..அட்ரஸ்ச பார்க்க மாட்டாங்க   என்று முனுமுனுத்தார் பெரியவர் .

-- முற்றும்--

Wednesday, May 26, 2010

சிரிங்க

கோபு :  இந்த பஸ் டிரைவர..  ரயில் ஓட்ட சொன்னது தப்பபோச்சு
பாபு   :    ஏன் ?
கோபு :  ஸ்டேஷன்னை விட்டு தள்ளி நிப்பாட்டுறாரு ...  

கவலை

அவனவனுக்கு ஒரு கவலை........................

கலைஞருக்கு ....முதல்வர் + கச்சி தலைவர் பதவியை அழகரிக்கு குடுக்குறதா ? அல்ல ஸ்டாலினிக்கு குடுகுரதாணு கவலை ?

பாட்டாளி அய்யாவுக்கு ... தி.மு.க பக்கம் போகலாமா ? ஆ.தி.மு.க பக்கம் போகலாம்னு கவலை ?

திருநாவுக்கரசரின் கவலை .. எந்த கச்சிக்கு தாவலம்னு ?

அம்மாவுக்கு 2011 ல ஆச்சிய பிடிக்கணும்னு கவலை .

தமிழ் மக்களுக்கு ...யாருக்கு ஓட்டு போடறதுன்னு கவலை ......

எனக்கு எங்க ஆபீஸ்ல எப்ப விடுவாங்கனு கவலை ..........

............... கவலை தொடரும் ..........................

Thursday, May 20, 2010

Samy from India to Thailand




Samy my partner ( i will call him as partner only but he is my relative ) went thailand some years back. Now his name came in Thai Newspaper for his best performance in Cricket and he made his team to won the match.

I really proud of Sam.

அமெரிக்க முதல் இந்திய வரை

சினிமாகாரர்கள் ...தாங்கள் தான் இந்த நாட்டை காப்பாத்த பிறந்தவர்கள் மாதிரி நினைகுறார்கள்.. அது ஏன் ? இதுல கேரளா மக்களை மெச்சலாம். சினிமா காரர்களை சினிமா பார்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள்.

இது போதாதுன்னு இப்ப குஷ்பூ வேற ... இவ தப்பு பண்ணிட்டு மத்த பெண்களையும் இவ வழியெல போனா தப்பு இல்லன்னு சொல்ற. இப்ப இவ அரசியல்வாதி வேற ... என்ன கொடுமை சரவணன் ( புரிஞ்சிகிங்கோ .... )

ஜெ கணக்கு 2011




இரட்டை இலைக்கு இன்னமும் இருக்கும் செல்வாக்கு, எம்.ஜி.ஆர். பக்தர்கள், விஜயகாந்த்தின் வாக்கு வங்கி, வைகோவின் பிரசார பலம், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் பணிகள், அழகிரி - ஸ்டாலின் ஆட்களின் உள்குத்து, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பணம் வாங்கினாலும் தான் நினைத்த கட்சிக்குத்தான் வாக்கு அளிப்போம் என்ற பென்னாகரம் மக்கள் அளித்துள்ள நம்பிக்கை... ஆகியவற்றைத் தனது வெற்றிக் கான சூத்திரங்களாக ஜெயலலிதா கணித்துவைத்திருக்கிறார்.

Monday, May 17, 2010

ஒரு கோடி கோடி ரூபாய் ஊழல்

என்ன குழப்பமா இருக்கா ? ... இதுவரை ராஜா ஒரு லச்சம் கோடி ஊழல் பண்ணி இருகார். இதை ரெகார்ட் பிரேக் பண்ற மாத்ரி யாராவது ஒரு கோடி கோடி ரூபாய் ஊழல் பண்ணின ... இதை எப்படி சொல்லுவிங்க ... அதனால ... இப்பவே சொல்லி பழகிக்கோங்கோ. ஏன்னா யாராவது hidden camera, டெலிபோன் ஒட்டு கேப்பது மூலம் கூடிய விரைவில் வரும்.

Friday, May 14, 2010

Gold Exchange Traded Fund

கையில் ஒரு கிராம் தங்கம்கூடப் பெற்றுக்கொள்ளாமல் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடே கோல்டு ஈ.டி.எஃப் (gold Exchange Traded Fund). இதில் ஒரு கிராம் தங்கம் என்பது ஒரு யூனிட். உங்களிடம் இருக்கும் பணத்துக்கு ஏற்ப (அன்றைய சந்தை விலையில்) எவ்வளவு யூனிட் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். சாதாரணமாக, ஆபரணத் தங்கம் வாங்கும்போது செலவழிக்க வேண்டிய செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகள் இதில் இருக்காது. ஆனால், பொருளாக ஒரு கிராம் தங்கம்கூட உங்கள் கையில் கொடுக்க மாட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் அன்றைய சந்தை மதிப்புக்கு உங்கள் பெயரில் இருக்கும் தங்க யூனிட்களை விற்றுபணத் தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு டிமேட்அக்க வுன்ட் மற்றும் டிரேடிங் அக்கவுன்ட் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். டிமேட் அக்கவுன்ட் தொடங்க வங்கிகளையும், டிரேடிங் அக்கவுன்ட்டுக்கு ஸ்டாக் புரோக்கர்களையும் அணுகவும். தற்போதைய சூழலில் கோல்டு ஈ.டி.எஃப் முதலீடு நல்ல லாபம் அளிப்பதாக உள்ளது. ஈ.டி.எஃப் முதலீடு என்பது கிட்டத்தட்ட வங்கி டெபாசிட் போலத்தான். ஆனால், வங்கி வைப்பு நிதியைக்
காட்டிலும் அதிக லாபம் இதில் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் இருக்கும் அளவுக்கு இதில் ரிஸ்க் இல்லை

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.

''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.

வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,

குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.

இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.

கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.

100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும். என் வீட்டு மாடியில் தலைகீழ் பிரமிடு வடிவத்தில் ஒன்றின் மீது ஒன்றைக் கட்டி அதில் அடுக்குமாடிக் கீரைத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.

சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா? அதற்கும் எங்கும் போக வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும் உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டு பூந்தொட்டிகளில் போட்டு வந்தால் அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடி அளவு போட்டாலே, காய்கறிகள் செழித்து வளரும். குளியலறைக் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால் அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும். இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங் செய்வதுதான் இந்த முறையின் முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங் செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதே இருக்காது. கழிவு நீர் இல்லை என்றால் கொசு இருக்காது. இதை எல்லாம் செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழி அதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெது வெதுப்பாகவும், சித்திரை வெயிலில் தண்ணீர் எடுத்தால் குளிராகவும் இருக்கும். என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின் குளிர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது. வெளிப்புற வெப்பம் கூடி, இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும் தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரிய மரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.
Source : AV

பெயர் காரணம் : சேமிய பாத், ரைஸ் பாத்

தண்ணியில குளிகிறதுக்கு பெயர் தான் பாத். சேமிய, ரைஸ் தண்ணியில குளிகிறதநல சேமிய பாத், ரைஸ் பாத் என பெயர் காரணம் வந்து இருக்கலாம்

Thursday, May 13, 2010

VRS new meaning

V = Variable Amount
R = Relieving
S = Salary


Pls give me VRS......

உயிரை விட்டு சட்டத்தை காப்பாற்றும் மக்கள்

இந்திய மக்கள் ஒவ்வொறு கட்டத்திலும் பலர் உயிரை விட்ட பிறகு தான், அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுகிறார்கள். மதுரை பரோட்டா -- சென்னை போலி மருந்து -- தருமபுரி சிறுவன் அருள்குமார் எரிப்பு ...... எங்கே போகும் இந்த பாதை .............

தாத்தா சொன்னது

''மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான், சில ஆதிக்கச் சக்திகள், ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் அவதூறைப் பரப்புகின்றன!'' - கருணாநிதி

தாத்தா என்னமா டெக்னிகள சாதிய உள்ள இழுத்து விடுறாரு பார்...

தல சொன்னது

மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

தமிழ் நாடு காங்கிரஸ்சின் தலவிதி

தமிழ் நாடு காங்கிரஸ்காரருக்கு 2011 சீட் வேனும்ன தாத்தாவை புடிச்ச தான் கதை நடக்கும். சோனியா கிட்ட எல்லாம் பருப்பு வேகாது