Friday, May 28, 2010
முடிவு எப்போது ? தீர்வு ? ? ......???
முடிவு எப்போது ?
பாக் தீவிரவாதிக்கும் மாவோயிஸ்ட்க்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையென சமிப கால சம்பவங்கள் உள்ளன. தொழிலதிபர்கள் கையில் சிக்கி இந்திய சீர்கொளைந்து போய்கிட்டு இருக்கு. அதன் பாதிப்பே மாவோயிஸ்ட் தொடக்கம். அதன் வளர்ச்சி வகிதம் மலைப்பை உண்டக்கிறது. இதுவரை ராணுவத்தை தாக்கிகிட்டு இருந்த மாவோயிஸ்ட் இப்போ மக்களை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா.. பாகிஸ்தானை போல் மாறி வருகிறது. மக்களை குறி வைத்து ரயில் கவிழ்ப்பு முடிவு இல்ல தொடக்கம் .... விழிக்குமா இந்திய உள்துறை ?
விழிக்குமா இந்திய உள்துறை?...என்றால்..மாவோயிஸ்ட்டை கொல்ல துணை ராணுவத்தை அனுப்ப தேவையில்லை. அங்கே உள்ள மலை மக்களுக்கு, இந்திய அரசின் அணைத்து உதவிகை தடுக்கும் சக்தியை களையெடுக்க வேண்டும்.
மாவோயிஸ்ட் பல குழுகளாக செயல்படுகிறார்கள். உண்மைலே அவர்கள் ஒரு குடையீன் கீழ் செயல்படுகிரர்களா என்பது சந்தேகமே ? சில குழு மக்களை தாக்கும் அளவுக்கு மரத்து போய் மிருகமாய் மாறி வருகிறார்கள். அவர்களுக்கு, அரசாங்கம் தக்க சிகிச்சை (?) அளிக்கவேண்டும்.
தீர்வு... என்ன ?
விஞ்ஞான உத்திகளை பயன்படுத்தி ரயீல்லில் இருந்து தண்டவாளத்தை 1 KM தூரத்துக்கு கண்காணிக்க வேண்டும்.
Thursday, May 27, 2010
குழந்தை
"அருண்..ண் இங்கே பாருங்க உங்க குழந்தையை " ....அருந்தா கத்தினால். அருணுக்கு புரிந்துவிட்டது ..குழந்தை தப்பு செய்துவிட்டது என்று. ( தப்பு செய்தால் அது அருண் குழந்தை. சரியாக செய்தால் அது அருந்தா குழந்தை ).
அருந்தா தொடர்ந்தாள்.."இங்க வந்து பாருங்கோ. சுவரு முழுக்க கலர் பென்சில்ல கிறுக்கி இருக்க ". சரி விடு குழந்தைன அப்படி இப்படி தான் இருக்கும் ..இது அருண். சரி சரி ஓனரிடம் நான் சொல்லிகிறேன் ..என்றான். "அந்த சேட்டு (ஓனர்) இது ஒரு காரணமா வச்சி அட்வான்ஸ் பணத்தில் பத்தாயீரம் கழிச்சிடுவார்".. என்றாள். இந்த கலவரத்துக்கு இடையில் வீட்டுக்கு வெளியே மேளம் , தாளம் , தப்பாட்டம் விண்ணை கிழித்துகிட்டு இருந்தது .
உடனே அருண் வீட்டின் வாசல் கதவை திறந்தான். மேள தாள கும்பல் நின்றார்கள். குழந்தையை கூப்பிடுங்கோ சார்..என்றான் ஒருவன். அருணுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அருந்தாவும், குழந்தை ஹர்சு வாசலுக்கு வந்தார்கள். இந்தமா மாலைய போட்டுக்கோன்னு குழந்தைக்கு மாலைய போட்டுவிட்டான்... ஒருவன். மூவருக்கும் ஒன்றும் புரியலில்லை. சுவத்தில கலர் பென்சில கிறுக்கினதுக்கு மாலையா ? என்றாள் அருந்தா.
"யோவ் " ...பக்கத்துவிட்டு மாடியில் இருந்து ஒரு பெரியவர். " என் பேத்திக்கு தான் முனிஸ்வரன் கோவில முதல் மொட்டை.. இங்கே வாங்கையா ..வேன் பத்து நிமிஷத்துல வந்துடும் ..போய் ஏரிகிங்கோ".
அட்வான்ஸ் வாங்கும்போது பணம் எவ்வளவுன்னு எண்ணி பார்கிறாங்க ..அட்ரஸ்ச பார்க்க மாட்டாங்க என்று முனுமுனுத்தார் பெரியவர் .
-- முற்றும்--
Wednesday, May 26, 2010
சிரிங்க
பாபு : ஏன் ?
கோபு : ஸ்டேஷன்னை விட்டு தள்ளி நிப்பாட்டுறாரு ...
கவலை
கலைஞருக்கு ....முதல்வர் + கச்சி தலைவர் பதவியை அழகரிக்கு குடுக்குறதா ? அல்ல ஸ்டாலினிக்கு குடுகுரதாணு கவலை ?
பாட்டாளி அய்யாவுக்கு ... தி.மு.க பக்கம் போகலாமா ? ஆ.தி.மு.க பக்கம் போகலாம்னு கவலை ?
திருநாவுக்கரசரின் கவலை .. எந்த கச்சிக்கு தாவலம்னு ?
அம்மாவுக்கு 2011 ல ஆச்சிய பிடிக்கணும்னு கவலை .
தமிழ் மக்களுக்கு ...யாருக்கு ஓட்டு போடறதுன்னு கவலை ......
எனக்கு எங்க ஆபீஸ்ல எப்ப விடுவாங்கனு கவலை ..........
............... கவலை தொடரும் ..........................
Thursday, May 20, 2010
Samy from India to Thailand
அமெரிக்க முதல் இந்திய வரை
இது போதாதுன்னு இப்ப குஷ்பூ வேற ... இவ தப்பு பண்ணிட்டு மத்த பெண்களையும் இவ வழியெல போனா தப்பு இல்லன்னு சொல்ற. இப்ப இவ அரசியல்வாதி வேற ... என்ன கொடுமை சரவணன் ( புரிஞ்சிகிங்கோ .... )
ஜெ கணக்கு 2011

இரட்டை இலைக்கு இன்னமும் இருக்கும் செல்வாக்கு, எம்.ஜி.ஆர். பக்தர்கள், விஜயகாந்த்தின் வாக்கு வங்கி, வைகோவின் பிரசார பலம், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளின் தேர்தல் பணிகள், அழகிரி - ஸ்டாலின் ஆட்களின் உள்குத்து, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பணம் வாங்கினாலும் தான் நினைத்த கட்சிக்குத்தான் வாக்கு அளிப்போம் என்ற பென்னாகரம் மக்கள் அளித்துள்ள நம்பிக்கை... ஆகியவற்றைத் தனது வெற்றிக் கான சூத்திரங்களாக ஜெயலலிதா கணித்துவைத்திருக்கிறார்.
Wednesday, May 19, 2010
Monday, May 17, 2010
ஒரு கோடி கோடி ரூபாய் ஊழல்
Friday, May 14, 2010
Gold Exchange Traded Fund
காட்டிலும் அதிக லாபம் இதில் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் இருக்கும் அளவுக்கு இதில் ரிஸ்க் இல்லை
இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்
மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார்.
''நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. இவற்றை நம் வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். முதலில் தண்ணீர். ஒரு தொட்டி அமைத்து மழை நீரைச் சேகரிக்கலாம். மழை நீரைச் சாக்கடைக்குள்விட்டு, அது கடல் நீரில் கலந்து, அப்புறம் கடல் நீரைக் குடிநீராக்கும் கூத்துக்குப் பதிலாக, முறையாக மழை நீரைச் சேகரித்தாலே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். மிகக் குறைந்த பரப்புள்ள மொட்டை மாடி இருந்தாலே, ஆறு ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்கலாம்.
வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட்டிக்குள் போட்டுவைத்தால், எல்லா அசுத்தங்களும் அடங்கித் தெளிவடைந்துவிடும். அதைச் செப்புப் பாத்திரத்தில் எடுத்து தேற்றான்கொட்டைகளைப் போட்டால்,
குடிநீர் தயார். யுரேனியத்தையே சமநிலைப்படுத்தும் தன்மை உள்ள தேற்றான்கொட்டைகள் நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான்.
இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விட்டுவிடலாம். அதில் இருந்து எடுத்து செப்புப் பாத்திரத்தில் வைத்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்தலாம். என் வீட்டில் இப்படித்தான் செய்கிறேன்.
கேன்களில் அடைக்கப்பட்ட நீர் எத்தனை மாதங்கள் பழையது என்றுகூடத் தெரியாத நிலையில், இந்த எளிய முறையைச் சாத்தியமுள்ள எல்லோரும் செய்தால் தண்ணீர் பிரச்னையும் தீரும், நல்ல ஆரோக்கியமான நீரும் கிடைக்கும். 100 சதுர அடி மொட்டை மாடி இருந்தாலே வருடத்துக்கு 10 ஆயிரம் லிட்டர் மழை நீரைச் சேகரிக்க முடியும்.
100 அடி சுற்றளவுகொண்ட வீட்டு மொட்டைமாடியில் பாதைக்கு 5 அடி விட்டுவிட்டால் மிச்சம் 95 அடிகள் கிடைக்கும். இது சதுர அடி கணக்கில் 155 சதுர அடி வரும். சென்னைக்குள் 155 சதுர அடி நீளத்தில் நீங்கள் விவசாயம் செய்யலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? 800 சதுர அடி பரப்புள்ள என் வீட்டு மொட்டை மாடியில் 40 மூலிகைகள் உள்பட 150 வகையான செடிகள் இருக்கின்றன. மொட்டைமாடித் தோட்டம் என்றதும் எல்லோரும் பயப்படும் முதல் விஷயம் தண்ணீர் பிரச்னை! ஐந்து பேர்கொண்ட குடும்பத்தில் சமையல் அறையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறைப்படுத்தினாலே கழிவு நீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்த முடியும். மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்க முடியும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டும்போதே இதற்கான ஏற்பாட்டைச் செய்வது நல்லது. இதுக்கூடச் சிரமம் என்றால் மிக எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. 20 சதுர அடியில் பானைத் தோட்டம் போட்டாலே, ஒரு குடும்பத் துக்குப் போதுமானது. கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிதி பாகற்காய், காராமணி என நம் ஊர்க் காய்கறிகள் அனைத்தும் விளையும். என் வீட்டு மாடியில் தலைகீழ் பிரமிடு வடிவத்தில் ஒன்றின் மீது ஒன்றைக் கட்டி அதில் அடுக்குமாடிக் கீரைத் தோட்டம் அமைத்து இருக்கிறேன்.
சரி, இதற்கு உரம் வேண்டும் இல்லையா? அதற்கும் எங்கும் போக வேண்டாம். ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும் உருவாகும் மக்கும் கழிவுகளை இரண்டு பூந்தொட்டிகளில் போட்டு வந்தால் அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப் பிடி அளவு போட்டாலே, காய்கறிகள் செழித்து வளரும். குளியலறைக் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால் அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும். இப்படி எல்லாவற்றையும் ரீ-சைக்ளிங் செய்வதுதான் இந்த முறையின் முக்கியமான அம்சம். இப்படி ரீ-சைக்ளிங் செய்ய ஆரம்பித்தால், கழிவு நீர் என்பதே இருக்காது. கழிவு நீர் இல்லை என்றால் கொசு இருக்காது. இதை எல்லாம் செய்தால் வீட்டில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும். நம் வீட்டுக் கிணற்றில் மார்கழி அதிகாலையில் தண்ணீர் எடுத்தால் வெது வெதுப்பாகவும், சித்திரை வெயிலில் தண்ணீர் எடுத்தால் குளிராகவும் இருக்கும். என்ன அர்த்தம் என்றால், தண்ணீரின் குளிர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது. வெளிப்புற வெப்பம் கூடி, இறங்கும்போது நமக்குத் தண்ணீர் குளிராகவும், வெப்பமாகவும் தெரிகிறது. மேற்சொன்ன மாடித் தோட்டத்தையும், வீட்டைச் சுற்றி உரிய மரங்களும் வளர்த்தால், வீட்டின் வெப்பம் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் சீராக இருக்கும்!''என்கிறார் இந்திரகுமார்.Source : AV
பெயர் காரணம் : சேமிய பாத், ரைஸ் பாத்
Thursday, May 13, 2010
உயிரை விட்டு சட்டத்தை காப்பாற்றும் மக்கள்
தாத்தா சொன்னது
தாத்தா என்னமா டெக்னிகள சாதிய உள்ள இழுத்து விடுறாரு பார்...